

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“விஜய் அரசியலுக்கு வந்து குறுகிய காலம்தான் ஆகிறது. விஜய் கட்சித் தொடங்கியதற்கு காரணமே திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான். எங்களுடைய நோக்கமும் அதுதான். அதனால் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெறுவார். ஆனால் வெற்றிப்பெறமாட்டார்.
அதனால் உங்களுடைய வாக்குகளை வீணாக்காதீர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள். அப்போது உறுதியாக திமுக தோற்கும். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் உங்கள் நோக்கம் நிறைவேறும்.
2016-ல் எனக்கு நிறைய ஆதரவு இருந்தது. ஆனால் நான் வாக்குகளைப் பெறுவேன், வெற்றிப்பெற மாட்டேன் என அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டார்கள். அதே சூழல்தான் இன்றும் உள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் அதிமுக கூட்டணிக்கு போடுங்கள். அதன்மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும்.” என தெரிவித்தார்.