அண்ணன் இ.பி.எஸ் முதலமைச்சராக பதவியேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்

இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில்,பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
அண்ணன் இ.பி.எஸ் முதலமைச்சராக பதவியேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்
Published on

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

மயிலாப்பூர் தொகுதி கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக.

ஆனால், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்காத நிலையில் இபிஎஸ் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில்,பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியோடு கலந்துகொண்ட பின் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,“ போட்டியிடுகின்ற இடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்பு முதல் பிரச்சாரம்.. அண்ணன் எடப்பாடி அவர்கள் பதவியேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..

சென்னையில் ஒரு தொகுதியாக இருந்தாலும் ஒட்டுமொத்த சென்னைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.

அண்ணன் எடப்பாடி பழனிசாமி அழைத்ததன் பேரில் இன்று மயிலாப்பூர் பிரசாரத்தில் பங்கேற்றேன்.

வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com