தொகுதி மறுவரையறையில் நாம் நினைத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது- எடப்பாடி பழனிசாமி

நாம் ஆட்சியில் இருக்கும் போதுதான் உள்ளாட்சியில் 33 சதவீதம், அப்புறம் 50 சதவீதம் கொண்டுவந்தோம்.
தொகுதி மறுவரையறையில் நாம் நினைத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது- எடப்பாடி பழனிசாமி
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம், திருசெங்கோடு - பரமத்தி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாவை தோற்கடித்ததாக பேசுகிறார் ஸ்டாலின். மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த மசோதாவை தோற்கடித்த கட்சி தி.மு.க., பெண்களுக்கு கிடைத்த உரிமையை தடுத்தது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி.

அம்மா 1998-ல் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்தபோது நான் திருச்செங்கோடு எம்பியாக இருந்தேன், அம்மா கோரிக்கையை ஏற்று பிரதமர் வாஜ்பாய் கோரிக்கையை ஏற்று, தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்தார்.

அவர்தான் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது முலாயம்சிங் எம்பி மசோதாவை பிடுங்கி கிழித்து எறிந்தார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று நினைக்கும் கட்சி அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு பெண்களின் இடஒதுக்கீட்டில் விருப்பமில்லை. நாம் ஆட்சியில் இருக்கும் போதுதான் உள்ளாட்சியில் 33 சதவீதம், அப்புறம் 50 சதவீதம் கொண்டுவந்தோம். இந்த மசோதாவை தாக்கல் செய்தது அ.தி.மு.க.

அப்போது பிரதமர் மோடி நம்மிடம் பேச்சு வார்த்தை நடத்தினார், நாமும் ஏற்றுக்கொண்டோம், மசோதா கொண்டு வந்தார். ஆனால் தி.மு.க. எதிர்த்து ஓட்டு போட்டு தோற்கடித்தது தி.மு.க. கூட்டணி. எனவே அவர்களை பெண்கள் மன்னிப்பார்களா?.

பாராளுமன்ற தொகுதி வரையறை, மாற்றி அமைக்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் முறைப்படுத்துகிறார்கள். ஆனால் ஸ்டாலின் என்ன சொன்னார்..? மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் தமிழ்நாட்டுக்கு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு எம்பி எண்ணிக்கையோ, அதற்குத் தக்க உயர்த்தினார்கள், தமிழ்நாட்டில் 39 என்று இருப்பதை 59 ஆக உயர்த்த இருந்தனர். உள்துறை அமைச்சர் தமிழ்நாடு பாதிக்காது என்றார்.

7.18 சதவீதம் ஆக இருப்பதை 7.23 சதவீதம் ஆக உயர்த்த இருந்தனர். மத்திய அரசு நமக்கு சாதகமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மசோதாவை தோற்கடித்ததாக வீரவசனம் பேசுகிறார் ஸ்டாலின்.

நாட்டு மக்களை தோற்கடித்துவிட்டீர்கள் ஸ்டாலின் அவர்களே, மக்களின் கனவுகளை, பெண்களின் கனவை சிதைத்துவிட்டீர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திய தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுங்கள். நாடாளுமன்ற மறுவரையறையில் நாம் நினைத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் குறைந்த இடம் என்று நினைத்தார் ஸ்டாலின். ஆனால் 59 என்று அறிவித்து ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டனர். பெண்களின் உரிமையை பறித்துவிட்டார் ஸ்டாலின். இதற்கு ஒவ்வொரு பெண்களும் தி.மு.க.வுக்கு தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com