அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!- மு.க.ஸ்டாலின்

தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
TN CM Vijay- MK Stalin
Published on

போதைப்பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியான நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சென்னை எழும்பூரில் போராட்டத்திற்கு காலையில் போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!

த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!

- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!

அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!

“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com