‘அடிவாங்க அடிவாங்க வலிமையாக மாறுகிறது அதிமுக’ - இபிஎஸ்

நாகப்பட்டினம் அரிவுத்திடலில் அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
‘அடிவாங்க அடிவாங்க வலிமையாக மாறுகிறது அதிமுக’ - இபிஎஸ்
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகப்பட்டினத்தில் அதிமுக வேட்பாளர்கள் தங்க. கதிரவன், ஓ.எஸ்.மணியன் மற்றும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய பேசிய அவர்,

“எம்.ஜி.ஆர். இறந்தபிறகு இந்தக் கட்சி காணாமல் போய்விடும் என கருணாநிதி எண்ணினார். ஆனால் ஜெயலலிதா வந்து சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். ஜெயலலிதா இறந்தபிறகும் திமுக சதி செய்தது. ஆனால் அந்த சதி அனைத்தும் மக்களால் முறியடிக்கப்பட்டது.

எத்தனையோ வழக்குகள் அதிமுகமீது போடப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் எதிர்த்து போராடி வலிமையான இயக்கம் அதிமுக என நிரூபித்தோம். அடி வாங்க வாங்க அதிமுக வலிமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் திமுக செய்யும் தவறால் அதிமுக பலம் பெறுகிறது.

அதிமுகவை அழிக்க எவர் நினைத்தாலும் அவர்தான் அழிந்துபோவார். இன்று அதிமுக புதுப்பொலிவோடு தேர்தலை சந்திக்கிறது. திமுக கொள்கையோடு கூட்டணி வைத்துள்ளதா? தமிழ்நாடு மக்களுக்கு எது சரி, தவறு என நன்றாக தெரியும்.

மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். நான் ஒரு விவசாயி. எனக்கு விவசாயிகளின் நிலை தெரியும். நான் முதலமைச்சராகும்போது இந்த விவசாயிகளுக்கு எந்த கவலையும் இருக்காது.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com