என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.-விற்கு? - எடப்பாடி பழனிசாமியுடன் தனியரசு சந்திப்பு
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 23-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






