பொங்கல் நாளில் தேர்வுகள்... தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.. சு.வெங்கடேசன்

Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை...
பொங்கல் நாளில் தேர்வுகள்... தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.. சு.வெங்கடேசன்
Published on

ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.

எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.

அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.

ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு...

சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் ICAI தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com