கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி- தென்சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுத்தப்படுகிறார்கள்.அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.
கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி- தென்சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Published on

சென்னை:

கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென் சென்னையில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெம்மேலியில் தினமும் 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுத்தப்படுகிறார்கள்.

மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அடையாறு பகுதி பொறியாளரை 8144930913 என்ற எண்ணிலும், பெருங்குடி பகுதி பொறியாளரை 8144930914 என்ற எண்ணிலும் சோழிங்க நல்லூர் பகுதி பொறியாளரை 8144930915 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com