போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு தேவை..!- கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

தமிழ்நாடு-கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதி.
Kerala minister Ramesh
Published on

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜயுடன் ஆலோசித்த பிறகு கேரள அமைச்சர் ரமேஷ் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

தென்மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜயுடன் ஆலோசித்தேன்.

தமிழ்நாடு-கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிரான ஆபரேஷன் துஃபான் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களில் முக்கிய தலைவராக உள்ள விஜய் போதை விழிப்புணர்வு குறித்து பேச வேண்டும்.

இளைஞர்கள், மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை முதலமைச்சர் விஜய் ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து 5 மாநில டிஜிபிக்கள் இணைந்து ஆலோசிக்க உள்ளனர்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுவை மாநிலங்கள் ஒன்றிணைந்து போதை பொருள் தடுக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் போதை பொருள் விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com