2031க்குள் 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு!

மின்சார சார்ஜிங் நிலையங்கள் மூலம் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் முடிவு.
2031க்குள் 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு!
Published on

தமிழ்நாடு அரசு 2031ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில், தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில் இன்று ITDP இந்தியா மற்றும் வழிகாட்டி தமிழ்நாடு அமைப்புகளுடன் இன்று உயர்மட்ட தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் மாசை குறைக்க மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், இதன்மூலம் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த முடிவு வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com