

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில் தனது சுய விவரங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு இணையத்தில் முதலமைச்சர் விஜய் பதிவு செய்துள்ளார்.
மேலும்,"மக்கள் தொகை சுய கணக்கெடுப்புக்கு உண்மையான விவரங்களை வழங்குமாறு" தமிழக மக்களிடம் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.