பக்ரீத் மற்றும் பிற நாட்களில் பொது இடங்களில் பசுக்களை பலியிட தடை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

தமிழ்நாட்டில் பக்ரீத் அல்லது வேறு எந்த நாளிலோ பசுக்களை அறுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்தது.
Supreme Court stays Madras High Court order on Tamil Nadu cow slaughter ban
Published on

தமிழ்நாட்டில் பசுவதை தடை சட்டம்:

பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாள் அல்லது வேறு எந்த நாளிலும் பசுவோ, கன்று குட்டிகளோ வெட்டப்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.

தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையின்போதோ அல்லது வேறு எந்த நாளிலோ பசுக்கள் மற்றும் கன்றுகளை அறுப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் முழுமையான தடை விதித்தது.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இறைச்சி கடைகள் அல்லாத பிற இடங்களில் பசுக்களை வதைப்பதை தடுக்ககுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “பக்ரீத் பண்டிகையின்போது, இறைச்சி கூடங்களாக நியமிக்கப்படாத இடங்களில் பசுக்களையும் கன்றுகளையும் பலியிடலாமா என்பதே இந்த பொது நல வழக்கில் பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.

எனவே எந்தவொரு விலங்கும் வெட்டப்படுவதற்கு முன்பு, அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு 4(3)(b) என்பது, காயம், ஊனம் அல்லது குணப்படுத்த முடியாத ஏதேனும் நோயின் காரணமாக ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிட்ட சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால், இறைச்சிக்காக கால்நடைகளை வெட்ட அனுமதிக்கக்கூடாது.

எனவே, பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டின் நலன் கருதி, பசுவதைக்கு தடை விதிப்பது அவசியம் என அரசு கருதுவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களிலும் பசுக்கள் மன்றும் கன்றுக்குட்டிகளை வதைப்பதற்கு தடை விதிக்க அரசுக்கு உத்தரவிடுகிறது”.

மேலும் அரசியலமைப்பின் 48வது பிரிவைக் குறிப்பிட்டு, பசுக்கள், கன்றுகள் மற்றும் பிற கால்நடைகள் வெட்டப்படுவதை தடைசெய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அமர்வு கூறியது.

உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு:

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com