மாநில கல்விக்கொள்கை: ஜூன் 15-ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளார்.அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. அதன்பின் மாநில கல்விக்கொள்கைக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 15-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com