கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

திட்டமிட்டு எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது
கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
Published on

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com