துப்பாக்கி முனையில் பிரபல ரவுடியை கைது செய்த தனிப்படை போலீசார்

பிரபல ரவுடியை செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான எண்ணூர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
Arrested
Published on

பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடி தலைமறைவு

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகர் சென்னை கிண்டி அருகே நட்சத்திர விடுதியில் இருந்த பொழுது போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தனசேகர் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான எண்ணூர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

ரவுடி கைது

இந்நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி நேற்று நள்ளிரவில் நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற தனிப்படை போலீசார் பிரபல ரவுடி தப்பி இல்லாதவாறு ஓட்டலை சுற்றி வளைத்தனர்.

போலீசார் சுற்றி வளைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபல ரவுடி தப்ப முயற்சி செய்தபோது துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட தனசேகரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, சொகுசு கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com