Nice Speech- முதலமைச்சருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார் எஸ்.பி.வேலுமணி

சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எஸ்.பி.வேலுமணி- முதலமைச்சர் விஜய்
Published on

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்த புகார்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். அப்போது, டாஸ்மாக்கில் பார்ட்டி பண்ட் என முதலமைச்சர் விஜய் பேசியதை அடுத்து தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

இதை அடுத்து முதலமைச்சர் விஜய் தனது உரையை நிகழ்த்தினார். இதன்பின் சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், முதலமைச்சர் விஜயை தனியே சந்தித்து கைகொடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பதிலுரை நிறைவடைந்து சட்டமன்றத்தில் இருந்து வெளியே வருகை தரும் முதலமைச்சர் விஜய் வருவார் என்பதால் அவர் செல்லும் வழியில் காத்திருந்து அவரை சந்தித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்தினார்.

முதலமைச்சர் விஜயிடம் உங்களுடைய பேச்சு நன்றாக இருந்தது, Nice Speech என எஸ்.பி.வேலுமணி பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com