

"2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்; மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டும் 60%-க்கும் மேற்பட்ட முறைகேடுகள் ஏன்" என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர்,"இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுக்கும் Doubtful Engineஆக பாஜக அரசு மாறிவிட்டது; பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? தேர்வுத்தாள் கசிவு குறித்து மத்திய கல்வி அமைச்சரிடம் என்ன பதில் உள்ளது?" என்றார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!
இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி/மத்திய அரசு தேர்வுகள் உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன!
பா.ஜ.க-வின் "Double Engine" அரசு இப்போது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் "Doubtful Engine" ஆக மாறிவிட்டது!
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
அவர்களே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.