பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி... பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில்

பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை.
பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி... பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில்
Published on

கோபிசெட்டிபாளையம்:

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

* தனது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

* நான் அமைதியாக இருப்பது அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான அறிகுறி.

* எனக்கு வழிகாட்டி முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியில் பயணிக்கிறேன்.

* பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

* எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை என்றார்.

இதனிடையே, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி என்ன நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com