தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- செல்வப்பெருந்தகை

ஒருபுறம் விலைவாசி உயர்வு. மற்றொருபுறம் வரி உயர்வு. இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான்.
தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- செல்வப்பெருந்தகை
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தங்கம் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வும், குடும்பங்களின் பாதுகாப்பான சேமிப்பும் ஆகும். ஆனால், 'தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறிய சில நாட்களிலேயே தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15சதவீதம் சுங்கவரி (Customs Duty) விதித்திருப்பது, பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சுமையாக்கும் செயல்.

ஒருபுறம் விலைவாசி உயர்வு. மற்றொருபுறம் வரி உயர்வு. இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான்.

மக்களின் சேமிப்பையும், பெண்களின் எதிர்கால நம்பிக்கையையும் கூட வரிவிதிப்பின் மூலம் சுரண்டும் ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

பொருளாதார சுமையால் ஏற்கனவே துன்புறும் மக்களின் நிலையை புரிந்து கொண்டு, இந்த சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com