கூட்டமாக செல்வது பெரிதல்ல; வெற்றி மட்டும்தான் பெரியது- Sellur Raju

தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் அ.தி.மு.க.- தி.மு.க. இடையேதான் போட்டி.
கூட்டமாக செல்வது பெரிதல்ல; வெற்றி மட்டும்தான் பெரியது- Sellur Raju
Published on

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் பலர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க., த.வெ.க.வை சேர்ந்த பலர் அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க மாற்றுக்கட்சியினர் அலை, அலையாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். அ.தி.மு.க.வுடன், த.வெ.க. கூட்டணி என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் த.வெ.க. கூட்டணி என தி.மு.க.தான் திட்டமிட்டு பரப்பியது.

தி.மு.க.வில் ரகளை நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இன்றுவரை சரியில்லாத ஒன்று நிர்வாக பிரச்சனை. ஓ.பன்னீர்செல்வம் செல்லாத நோட்டு. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் அங்கு அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வருபவர்களுக்கு எங்களால் உழைப்பு மட்டுமே கொடுக்க முடியும். வேறு எதையும் எங்களால் கொடுக்க முடியாது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிக வலுவாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றியடையும். தேர்தலில் கூட்டம் கூட்டமாக செல்வது பெரியது இல்லை. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் பெரியது. எடப்பாடி பழனிசாமி நல்லவர். நிர்வாக திறன் மிக்கவர் என மக்கள் சொல்கிறார்கள். தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் அ.தி.மு.க.- தி.மு.க. இடையேதான் போட்டி. அ.தி.மு.க. கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள்.

தேர்தலுக்காக தி.மு.க. அரசு மதுரையில் சாலை அமைத்தது. அது தரமற்ற சாலையாக உள்ளது. பெண்கள் மஞ்சள் பூசி சென்றால் அழகாக இருக்கும். மஞ்சள் பூசி செல்லும் பெண் திடீரென பவுடர் பூசினால் நேற்று வரை எப்படி சென்றாள் என பெண்களே கேலி பேசுவார்கள். மஞ்சள் குங்குமம் வைத்து சென்றால் மகாலட்சுமி செல்வதாக சொல்வார்கள். திடீரென அமைச்சர் மூர்த்தி, மேற்கு தொகுதியில் சாலை உள்ளிட்ட பணிகளை கவனிப்பது இப்படித்தான் உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com