செம்மண் குவாரி முறைகேடு வழக்கு- பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

மண் அள்ளியதால் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு- பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!
Published on

செம்மண் குவராி முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாகி உள்ளனர்.

பொன்முடி 2011-ல் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக பொன்முடி அனுமதித்த அளவைவிட செம்மன் அள்ளியதாக 7 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

அளவிற்கு அதிகமாக மண் அள்ளியதால் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரையும் விழுப்புரம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com