த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

புதுச்சேரியில் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் புதுச்சேரி முதல்-மந்திரியுமான ரங்கசாமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்
Published on

திருச்செந்தூர்:

புதுச்சேரியில் வருகிற 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பிரகாரத்தில் நடந்து சென்று அங்குள்ள தூண்டுகை விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.

பின்னர் அவர் நேராக கோவிலுக்கு சென்று கோவிலில் சுவாமி மூலவர் சண்முகர், சத்ருசம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தற்போது வரை பா.ஜ.க. கூட்டணியில் தான் உள்ளது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார். அப்போது நிருபர்கள், த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளதாக கூறினார்.

புதுச்சேரியில் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் புதுச்சேரி முதல்-மந்திரியுமான ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com