ஸ்டாலின் தோல்விக்கு வருந்தினார் இபிஎஸ் - புதுவை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் அரசியல் மாண்புள்ளவர் எடப்பாடி பழனிசாமி.
ஸ்டாலின் தோல்விக்கு வருந்தினார் இபிஎஸ் -  புதுவை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

இந்நிலையில், புதுவை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருந்தினார்.

ஸ்டாலின் எல்லாம் எவ்வளவு பெரிய தலைவர் என கூறி இபிஎஸ் வருந்தினார்.

இந்த மக்கள் எப்படி யோசிக்கிறார்கள் என தெரியவில்லை எனக்கூறி வருந்தினார்.

அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் அரசியல் மாண்புள்ளவர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com