

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 900 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிள்ளையார்பாளையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் மின்தடை காரணமாக பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை என்பது தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவ-மாணவியர் சிரமத்துடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மின்தடை காரணமாக வாட்ஸ்-அப் செயலி மூலம் குறுஞ்செய்தி காலை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூரில் இருந்து வரும் மாணவர்களைவிட வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் வருகை புரிவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
மேலும், மின்தடை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடுவது இதுதான் முதல் முறை என தெரிவிக்கின்றனர்.