வாழப்பாடி அருகே தனியார் நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை

இவர் திருமணம் ஆகாத நிலையில் பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
வாழப்பாடி அருகே தனியார் நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்தவர் இளவரசன் (40). சேலத்தில் இயங்கும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணம் ஆகாத நிலையில் பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் சென்ற இவர் வாழப்பாடி பேளூர் சாலையிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள இவரது உறவினருக்கு சொந்தமான நிலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படையினர் உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com