திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் நியமனம்

செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் நியமனம்
Published on

திருவள்ளூர்:

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனரான தங்கவேல், கரூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனராக மாற்றப்பட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனர் வீரராகவராவ், தொழிற்கல்வி கமிஷனராக மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதஞ்சே நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.

வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com