கும்மிடிப்பூண்டியில் பா. ம. க. பொதுக்குழு கூட்டம்

வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில் பா. ம. க. பொதுக்குழு கூட்டம்
Published on

பொன்னேரி:

கும்மிடிப்பூண்டி பேரூர் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் இளஞ்செல்வன், நகர தலைவர் அஸ்வின்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மாணவர் அணி சங்க செயலாளர் இரா.கீர்த்தி ரதன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வ.மு.பிரகாஷ், மாவட்டத் தலைவர் எஸ்.வி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு? எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளும், கட்சியை பலப்படுத்த கிளைகள் தோறும் கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும்,கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு வசதி, பஸ் நிலையத்தில் மேற்கூரை, அனைத்து பஸ் புறவழிச்சாலையில் செல்லாமல் பஸ் நிலையம் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் ஆர்.விக்னேஷ் வரவேற்றார். முடிவில் இ.கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com