நாகர்கோவிலில் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பேரணி மேற்கொண்டார்.
நாகர்கோவிலில் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ
Published on

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார்.

இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அதன்பின், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நாகர்கோவில் வந்து சேர்ந்தார்.

வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை திறந்தவெளி வாகனத்தில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி வாகன பேரணி மேற்கொள்கிறார். இதில் பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் எழுந்துள்ள சூழ்நிலையில் தென் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com