சேகர்பாபு மீது நடவடிக்கை தேவை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் குற்றச்சாட்டு

கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
சேகர்பாபு மீது நடவடிக்கை தேவை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் குற்றச்சாட்டு
Published on: 

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 73 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.

முதலமைச்சரின் தோல்வி அக்கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி, முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னையின் 14 தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கூறியதாவது:

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயற்கை. இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.

தலைவரின் தொகுதியை கவனிக்கத் தவறியவர்மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை தேவை.

முதல்வரின் தோல்விக்கு காரணமானவர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com