50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு

டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் 4 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
TN Government
Published on

விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால், ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜயின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெண்டர்களை சமர்பிக்க குறுகிய நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் 4 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

நிர்வாக காரணங்களுக்காக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் நகராட்சி நிர்வாகத்துறையால் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச்சந்தை கடைகள், புதிய போர்வெல் அமைக்கும் பணி தொடர்புடைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com