

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆடி மாத ஆன்மீக வழிபாடு சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆடி மாதத்தில் தரிசனம் மேற்கொள்ள ஒரு நாள் சிறப்பு ஆடி அம்மன் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் வரும் ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 17-ந்தேதி முதல் சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன், திருமுல்லைவாயில் திருவுடைஅம்மன், பச்சையம்மன் கோவில், செம்புலிவரம் செங்காளியம்மன் கோவில்களுக்கு செல்ல கட்டணம் ரூ 1000.
மயிலாப்பூர் கற்பகாம்பாள், முண்டக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன், தேனாம்பேட்டை ஆலயம்மன், தி நகர் முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளியம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவில்களை சுற்றி பார்க்க கட்டணம் ரூ.800.
மதுரை மீனாட்சி அம்மன், வண்டியூர் மாரியம்மன், மடப்புரம் காளியம்மன், விட்டனேரி வெட்டுடையார் காளியம்மன், தாயமங்கலம் முத்து மாரியம்மன், ராக்காயி அம்மன், அழகர் கோவில் அம்மன் சுற்றுலாவிற்கு கட்டணம் ரூ.1400.
உறையூர் வெக்காளியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் மாரியம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், பொன்மலை பொன்னேஸ்வரி அம்மன், திருச்சி உக்கிர காளியம்மன் சுற்றுலாவிற்கு கட்டணம் ரூ.1,100.
தஞ்சாவூர் வராகி அம்மன் (பெரிய கோவில்), பங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூர் மகா மாரியம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்கை அம்மன், வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கிரி குஜாம்பிகை, காசி விஸ்வநாதர் விசாலாட்சி, மகாமக குளம் கும்பகோணம், தாராசுரம் ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்) கோவில் சுற்றுலாவிற்கு ரூ.1400.
இந்த ஆடி அம்மன் சுற்றுலா பயணத் திட்டங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் குடிநீர் வசதி, மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் முன்பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தவிர தமிழகத்தில் உள்ள 108 அம்மன் கோவில்களில் 5 நாட்கள் சுற்றுலாவிற்கும் (கட்டணம் ரூ.11, 250), ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் கோவில் 3 நாட்கள் சுற்றுலாவிற்கும் (கட்டணம் ரூ.6500), முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா தொகுப்புகளுக்கான முன்பதிவுகளை www.ttdconline.com என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-2533 3333, வாட்ஸ்அப் எண் 7550063121 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.