த.வெ.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை - அமித் ஷா

தவெக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
த.வெ.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை - அமித் ஷா
Published on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆளுங்கட்சி முதல் புதிய கட்சிகள் வரை தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தவெக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அதிமுக எங்களின் முதன்மையான கூட்டணிக் கட்சி. அக்கட்சியை 'பெரிய அண்ணன்' பாஜக கருதுகிறது.

தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் எங்களுடன் வந்தால், அது எங்கள் வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com