கல்விக் கட்டமைப்பில் முதலிடம்.. திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம்- தங்கம் தென்னரசு

இந்தியாவிலேயே பள்ளிக் கட்டமைப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு.
Ex Minister Thangam thennarasu
Published on

"இந்தியாவின் கல்வி வளர்ச்சிப் பாதையை வழிநடத்தும் மாநிலமாக தமிழ்நாடு மீண்டும் தனது முத்திரையைப் பதித்துள்ளது" என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கல்வியில் சிறந்த தமிழ்நாடு!

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் UDISE+ 2025–26 அறிக்கையில், 94.4% ஒருங்கிணைந்த மதிப்பெண்ணுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கட்டமைப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு.

மாணவர்களுக்கான தரமான கல்வி, நவீன டிஜிட்டல் வசதிகள், பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் எனப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் நவீன வசதிகளுடன் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மாண்புமிகு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு தேசிய அங்கீகாரம் இது.

இந்தியாவின் கல்வி வளர்ச்சிப் பாதையை வழிநடத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு மீண்டும் தனது முத்திரையைப் பதித்துள்ளது!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com