காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பாஜக நிர்வாகி போலீசில் புகார்

மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் புல்லட் ஓட்டிய செல்வபெருந்தகை . மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் மருதுபாண்டியன் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பாஜக நிர்வாகி போலீசில் புகார்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்று புல்லட் ஓட்டி சென்றார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை.

இதனால் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பாஜக கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் மருதுபாண்டியன் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com