TN Assembly Election | தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக் கொள்வாரா? - மு.க.ஸ்டாலின்

மோடி பிரதமரான பிறகும் கூட தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.
TN Assembly Election | தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக் கொள்வாரா? - மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளின் வேட்பாளர்கள், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* சூரிய உதயத்தை பார்க்க மக்கள் வரும் மாவட்டம் கன்னியாகுமரி.

* கன்னியாகுமரி மக்கள் அன்பால் என்னை திக்குமுக்காட வைத்தனர்.

* திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் ரெடியா?

* வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

* 3.12 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

* குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லவேண்டும்.

* கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதனை செய்து காட்டி உள்ளோம்.

* உரிமையோடு, உறவோடு ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்.

* கன்னியாகுமரி மாவட்டம் மீனவ நண்பர்கள் நிறைந்த மாவட்டம்.

* மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.

* மீனவர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை வயது வரம்பு 70 ஆக உயர்த்தப்படும்.

* 70 முதல் 75 வயது வரையிலான மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

* தமிழக மீனவர்களுக்கு இந்திய மீனவர்களாக பாஜக கருதவில்லை.

* மோடி பிரதமரான பிறகும் கூட தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.

* காங்கிரஸ் ஆட்சியின்போது மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று மோடி சாடினார்.

* நாட்டின் பிரதமர்களிலேயே தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக் கொள்வாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com