மு.க.ஸ்டாலின் 5-ந்தேதி லண்டன் பயணம்: 10 நாட்கள் தங்கி இருக்க முடிவு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி அதிகாலையில் லண்டன் புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மகன் இன்பநிதி ஆகியோரும் லண்டன் செல்கின்றனர்.
மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், இளைஞரணி செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி லண்டனில் படித்து வந்தார். ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்த அவர் படித்து முடித்து தற்போது சென்னையில் உள்ளார். கலைஞர் டி.வி.யில் நிர்வாக பயிற்சி மேற்கொண்ட அவர் ரெட்ஜெண்ட் நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

பட்டமளிப்பு விழா

லண்டன் மான்செஸ்டர் நகரில் இன்பநிதி படித்த கல்லூரியில் அவருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பட்டமளிப்பு விழாவை நேரில் காண்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி அதிகாலையில் லண்டன் புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மகன் இன்பநிதி ஆகியோரும் லண்டன் செல்கின்றனர்.

சுமார் 10 நாட்கள் லண்டனில் தங்கி இருக்கும் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு சென்னை திரும்புவார் என தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com