தொண்டர்கள் கருத்துக்களை நாளைக்குள் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்

இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான்
தொண்டர்கள் கருத்துக்களை நாளைக்குள் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்
Published on

சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தி.மு.க.வில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கருத்துக்களை இணையதளம் மூலமாக கேட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.

இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகள், அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை)க்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com