

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* தனது ஆட்சியில் அரசு ஊழியர்களை வஞ்சித்த இபிஎஸ் இன்று நாடகம் ஆடுகிறார்.
* அரசு ஊழியர்களை ஏமாற்றி இருந்தால் நேரில் வந்து நன்றி சொல்லி இனிப்பு ஊட்டுவார்களா?
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
* முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.
* எடப்பாடி பழனிசாமிக்கு அரசு ஊழியர்களின் ஓட்டும் கிடைக்காது, ஸ்வீட்டும் கிடைக்காது.
* பாஜகவின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து சிறுபான்மையினருக்கு துரோகம் இழைத்தவர் இபிஎஸ்.
* ஜெயலலிதா, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், தனபால் என எண்ணவே முடியாத அளவுக்கு இபிஎஸ்-ன் துரோக பட்டியல் நீள்கிறது.
* பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறியதற்கு மாறாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் இபிஎஸ்.
* துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமி தான்.
* தேர்தல் வந்தால் சங்கி கூட்டத்துக்கு தமிழ் தலைவர்கள் மீது திடீர் பாசம் வந்துவிடும்.
* டெல்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த முயன்ற கூட்டம் தான் இந்த சங்கி கூட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.