மகளிர் மேம்பாட்டுக்காக பார்த்து பார்த்து திமுக அரசு திட்டங்களை செய்துள்ளது - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியின் சாதனை திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள்.
மகளிர் மேம்பாட்டுக்காக பார்த்து பார்த்து திமுக அரசு திட்டங்களை செய்துள்ளது - மு.க.ஸ்டாலின்
Published on

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்.

* பேரறிஞர் அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர் ஈரோடு.

* திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* திமுக ஆட்சியில் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

* திமுக ஆட்சியின் சாதனை திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள்.

* மகளிர் மேம்பாட்டுக்காக பார்த்து பார்த்து திமுக அரசு திட்டங்களை செய்துள்ளது.

* செல்லும் இடமெல்லாம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து என்னை மகளிர் வரவேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com