

சென்னை அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் இணையும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆளுங்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் நிலையிலும் நம்மை தேடி வந்திருக்கின்றனர்.
* வழக்கமாக ஆளுங்கட்சியை நோக்கி தான் மாற்றுக்கட்சியினர் செல்வார்கள்.
* பதவியையோ வசதியையோ எதிர்பார்க்காமல் மக்களுக்கு பணியாற்றும் நோக்கத்திற்காக திமுகவுக்கு வந்துள்ளீர்கள்.
* தொண்டனாக இருந்தாலும் தலைவனாக இருந்தாலும் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
* ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகமே முக்கியம் என நினைத்தவர் கலைஞர்.
* வெற்றிக்காக வெறிகொண்டு எப்போதும் திமுகவினர் அலைந்தது இல்லை.
* ஆட்சி பறிபோகும் என தெரிந்தே அவசரநிலையை எதிர்த்தது திமுக.
* திமுக தயவில் தான் தற்போதைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.