

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* கால்களை வாரிவிட்டு அரசியலுக்கு வந்த இபிஎஸ் திமுக அரசு மீது பொய், புரட்டை பரப்புகிறார்.
* பெண்கள் பாதுகாப்பாக உணர்வதால் தான் அதிகளவில் வேலைக்கு செல்கிறார்கள்.
* பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று சொல்லும் வகையில் ஆட்சி செய்தவர் இபிஎஸ்.
* பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை, 3 மாணவிகள் எரித்துக்கொலை, பெண் ஐஏஎஸ் மீது ஆசிட் வீச்சு, இப்படி பெண்களுக்கு எதிரான அதிமுக ஆட்சியின் அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
* கற்பனை கோட்டையில் உலா வருகிறார் துரோகத்துக்கு பெயர்போன எடப்பாடி பழனிசாமி.
* தமிழ்நாட்டுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்தது தான் அதிமுக - பாஜக கூட்டணி.
* ஊழல் கூட்டம் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கைகோர்த்திருக்கிறது.
* குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்கள் அனைவரும் ஓட்டுக் கேட்க வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.