மருத்துவமனையில் தாயார் அனுமதி... மருத்துவர்களிடம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தயாளு அம்மாள்
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (93) வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே, அவ்வப்போது உடல்நலக்குறைவால் தயாளு அம்மாள் பாதிக்கப்படுகிறார். இதற்காக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில், தயாளு அம்மாளுக்கு நேற்றிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com