

தமிழ்நாட்டின் ஒசூர் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி, மண்டல வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டது.
10 கிலோமீட்டர்:
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு-கர்நாடக எல்லைக்கு அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை - ஓசூர் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது என்றும், இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அளவிலான நில அதிர்வு நிகழ்வு 'சிறிய அளவிலான நிலநடுக்கம்' என்று வகைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லைப் பகுதிகள்:
நிலநடுக்க மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளான கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் மக்களால் இது உணரப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், இத்தகைய சிறிய அளவிலான நில அதிர்வுகள் பொதுவாக கட்டிடங்கள் அல்லது கட்டமைப்புகளுக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை.