அண்ணாமலை அமைப்பால் த.வெ.க.விற்கு பாதிப்பா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தி.மு.க. 96 இடங்களில் வெற்றி பெற்றபோது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு கொடுத்தனர்.
Minister Sengottaiyan
Published on

அ.தி.மு.க.வின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீ த லீடர்ஸ்

வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் வேறு. எங்களுடன் இருக்கும் இளைஞர்கள் மக்கள் சக்தியாக உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

அதைப்போல் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளதை கேள்வி கேட்பவர்கள் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தபோது ஏன் கேள்வி கேட்கவில்லை.

தி.மு.க. 96 இடங்களில் வெற்றி பெற்றபோது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் மந்திரி சபையில் இடம் பெறவில்லை. நாங்கள் கூட்டணி கட்சியினருக்கு மந்திரி சபையில் இடம் வழங்கியிருக்கிறோம். இந்த பெருமை தமிழக வெற்றிக் கழகத்தையே சாரும். தி.மு.க , அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் என்ன தப்பு என்று டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் வட துருவம், தென் துருவமாக இருந்தது டி.டி.வி. தினகரனுக்கு தெரியாதா? அ.தி.மு.க.வின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தாததற்கு தமிழக ஆளுநர் வருத்தம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவாக கூறி இருக்கிறார், என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com