

சென்னை :
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாக நியாயமாக நியமிக்கப்பட உள்ளனர்.
* தகுதி அடிப்படையில் மட்டும் தான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
* நியமனங்களில் மெரிட் முறை மட்டுமே பின்பற்றப்படும்.
* எந்த இடத்திலும் லஞ்சம் இல்லாமல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம் இருக்கும்.
* கோர்ட் சிறப்பாக செயல்பட வேண்டும், ஏழை எளியோருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு அரசு செயல்படும்.
* உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அடிப்படையில் முறையாக நியமனங்கள் இருக்கும்.
* மெரிட் அடிப்படையிலான நியமனங்களுக்காக பல்வேறு தரப்பினர் எங்களை பாராட்டி வருகின்றனர்.
* கடந்த ஆட்சிக்காலத்தில் உயர் பதவிக்காக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு இருந்தது.
* தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.
* த.வெ.க. ஆட்சியில் அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது.
* எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை போனதால் த.வெ.க.வில் இணைகின்றனர்.
* மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதை சட்டப்பூர்வமாக தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
* தோழமை கட்சியினரின் ஆதரவுடன் த.வெ.க. அரசு முழு பலத்துடன் இருக்கிறது.
* த.வெ.க.வுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.