திருவண்ணாமலையில் மாணவிகளுடன் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

அமைச்சரின் எளிமையான அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
SportsMinister AadhavArjuna
Published on

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவிகளுடன் இணைந்து அவரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.

புதிய ஹாக்கி மைதானம் திறப்பு..

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று முதல் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மைதானத்தை திறந்து வைத்ததுடன் நேரடியாக களத்தில் இறங்கி அங்கு இருந்த மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தார்.

மாணவிகளுடன் உடற்பயிற்சி..

மைதானத்தில் தடகளம் மற்றும் இதர விளையாட்டுகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் பயிற்சி முறைகள் பற்றி கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மாணவிகளிடம் பேசிக்கொண்டே ஒரு பயிற்சியாளரைப் போல அவர்களுடன் சேர்ந்து மைதானத்தில் ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்..

மைதான ஆய்விற்குப் பிறகு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தடகளம், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் அமைச்சர் நேரடியாகக் கலந்துரையாடினார்.

அவர்களுக்குத் தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், முறையான தங்கும் விடுதி வசதிகள் மற்றும் சத்தான உணவு முறைகள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்து, வீரர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் விரிவாகப் பெற்றுக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com