அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்அப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
Minister Arunraj
Published on

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். உயர் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு வார்டுகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்அப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக சிகிச்சை பிரிவில் தொடங்கப்பட்ட புறநோயாளிகள் இணைய முன்பதிவு நடைமுறையால் 500 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர மினி கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்மா மினி கிளினிக்

கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டதாக கூறி அவை தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது த.வெ.க. அரசு அந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முனைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com