வரும் தேர்தல்களில் வெல்லப்போவது எங்கள் கூட்டணிதான்- மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு அணிதான் உள்ளது. அது ராகுல் காந்தி தலைமையிலான அணி.
மாணிக்கம் தாகூர்
Published on

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* த.வெ.க.வுக்கு 1.72 கோடி வாக்களித்துள்ளனர். நாம் காசு கொடுத்தும் வாக்களிக்கவில்லை என தி.மு.க.வினர் கவலையில் உள்ளனர்.

* தேர்தல் எப்போது வந்தாலும் ஜெயிக்கப்போவது த.வெ.க. கூட்டணி தான். தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தல்களில் த.வெ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

* த.வெ.க. ஆட்சியில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் லஞ்ச, ஊழலுக்கு த.வெ.க. கூட்டணி ஆட்சி முடிவு கட்டி உள்ளது.

* எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க தி.மு.க. முயன்றது மே 4-ந்தேதியே தெரியும்.

* தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே யார் வெற்றி பெறுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே த.வெ.க. தலைமையை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

* எங்களை பொறுத்தவரை தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்ற வேண்டும். தவெக ஆட்சிக்கு முதலில் சப்போர்ட் பண்ணது காங்கிரஸ் தான். இரண்டு அமைச்சர்களும் காங்கிரஸ் கட்சி பெயரையும், மரியாதையையும் காப்பாற்றுவார்கள்.

* காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு அணிதான் உள்ளது. அது ராகுல் காந்தி தலைமையிலான அணி. நாங்கள் எல்லோரும் ஒரு Players தான், என்னை பொறுத்தவரை டாஸ் போட அனுப்பி வைத்துள்ளார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com