மதுரை மேற்கில் திமுகவா? அதிமுகவா? - மக்கள் கூறுவது என்ன?

மதுரை மேற்கு தொகுதியில் திமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது மக்களிடையே கேட்கப்பட்ட கருத்துகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை மேற்கில் திமுகவா? அதிமுகவா? - மக்கள் கூறுவது என்ன?
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

மதுரை மேற்கு தொகுதி கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. குறிப்பாகச் செல்லூர் ராஜுவின் நீண்டகால அனுபவமும், அவர் தொகுதியில் செய்துள்ள பணிகளும் அவருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இத்தேர்தலிலும் இத்தொகுதியில் அவரையே அதிமுக களம் இறக்கியுள்ளது. திமுக சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், அமைச்சர் பி. மூர்த்தியின் தீவிர ஆதரவாளர் எனவும் கூறப்படும் ரகு பாலாஜி என்பவரை திமுக களம் இறக்கியுள்ளது. மேலும் நாதக, தவெக போன்ற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

இது வாக்குச் சிதறலை ஏற்படுத்தி முடிவுகளில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதி மக்களிடம் இந்த தேர்தல் குறித்து மாலைமலர் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது அங்கு திமுகவிற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாம் இடத்தில் அதிமுக உள்ளது.

இருப்பினும் அது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி என்பதை முடிவுகளை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com