நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.மின்தடை ஏற்பட்டு தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 4ம் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வின்போது மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மின்தடை காரணமாக குறைந்த வெளிச்சம், மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் மாற்று இடத்திற்கு சென்றதால் சிரமம் ஏற்பட்டது என்றும் இதனால் முழுமையாக நீட் தேர்வை எழுத முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மே மாதம் 4ம் தேதி அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து 4.15 வரை மின்தடை ஏற்பட்டு தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் மறுதேர்வு கோரிய மனு குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு) முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com